Posted by : ஆனந்த் சதாசிவம் Friday, May 18, 2012

உயரமாக பறக்கும் விமானங்கள் சில சமயம் விபத்துக்கு உள்ளாகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்களுக்கு கருப்பு பெட்டி என்னும் சாதனம் உதவுகிறது. இது எல்லா விமானங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image
Posted Image

கருப்பு பெட்டி என்ற பெயர் கொண்டு இது அழைக்கப்பட்டிருந்தாலும், இதன் நிறம் கருப்பு கிடையாது. ஆரஞ்சு வண்ணம் கொண்டது. சில பெட்டிகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெரிய விமானங்கள் எனில் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கும். இதில் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' என்னும் சாதனம் விமானியின் அறையில் நடக்கும் உரையாடலை பதிவு செய்கிறது. `டேட்டா ரிக்கார்டர்' என்னும் மற்றொரு சாதனம் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளின் இயக்கங்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில்தான் விமான விபத்துக்கான காரணத்தை கருப்பு பெட்டியின் மூலம் அறிய முடிகிறது.


Posted Image

இது நொறுங்கிய ஒரு விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட போது.

Posted Image

இதுவும் ஒரு கருப்புப் பெட்டி

Posted Image

அதைத் திறந்தால் இப்படி இருக்கும்!

Posted Image

கறுப்புப் பெட்டியின் தன்மை

[list]
செம்மஞ்சள் நிறத்தில்(orange) காணப்படும்.
தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.
உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது.
கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.
ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது.
எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.
வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும், தகவல் சேமிப்பு நாடாவும் பாதுகாக்கப்படுகின்றன

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

பார்த்தவர்கள்

மொழி மாற்றம்

- Copyright © Do You Know...? -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -