- Back to Home »
- புரியாத புதிர் »
- அண்டார்டிகாவில் மர்மமான முறையில் கடல் நீர் வற்றுகிறது
Posted by : ஆனந்த் சதாசிவம்
Friday, May 18, 2012
அண்டார்டிகா பகுதியில் ஆழத்தில் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது.
இதன் மூலம் பூமியின் பருவ நிலை மாற்றம் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஆனால் பனிக்கட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென் பகுதியில் உள்ள ஆழ்கடல் நீர் வற்றி வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வற்றி மாயமானதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றின் தண்ணீரை விட 50 மடங்குகளாகும். இந்த கடல் நீர் வற்றுவதற்கான காரணம் மர்மமாக உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உலகிலேயே மிகவும் குளிர்ந்த நீரைக் கொண்டுள்ள கடல் அண்டார்டிக்கா கடல் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடலின் நீர் வற்றிப் போவதற்கு அதிகரிக்கும் புவி வெப்பமும், ஓசோனில் விழுந்த ஓட்டையும் தான் காரணம் என புவி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.