- Back to Home »
- தெரிந்து கொள்வோம் »
- மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
Posted by : ஆனந்த் சதாசிவம்
Wednesday, August 14, 2013
மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
பகல் நேரங்களில்
மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில்
மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள்
காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால்
மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இரவில் மரங்களும்
காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன.
அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்கத் தேவையான அளவுக்கு வேண்டிய
பிராண வாயு கிடைக்காது. கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில்
மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
திமிங்கிலங்கள் அடிக்கடி தம் தலைப்பகுதியிலிருந்து நீரை ஊற்று போல் பீய்ச்சிடுவது ஏன்?
திமிங்கிலங்கள் தம் தலைப் பகுதியிலிருந்து நீரை பீய்ச்சிடுவதைக் கொண்டே கடலில் செல்லும். மாலுமிகள், தூரத்தில் திமிங்கிலங்கள் செல்வதைத் தீர்மானிக்கின்றனர். ஆனால், உண்மையில் திமிங்கிலம் பீய்ச்சிடுவது தண்ணீர் அல்ல! சுடு நீரும் வாயுக்களும் ஆகும். கடலினுள் நீண்ட நேரம் இருக்கும் திமிங்கிலத்தின் நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று (மூச்சு - வெளியிடும் காற்று - முக்கியமாக கரியமில வாயு) மற்றும் நீர்ச்சத்து மிகவும் சூடாகின்றது. இந்நிலையில் கடலின் மேற்பரப்புக்கு வரும் திமிங்கிலம் தன் தலைப்பகுதியில் உள்ள ஓர் நாசித் துவாரத்தைத் திறந்து நுரையீரலில் தேங்கிய கழிவுப் பொருளான கரியமில வாயு மற்றும் வெப்பம் மிகுந்த நீர்ச்சத்தினை வேகமாகக் கடலின் குளிர்ந்த நீர் வழியே பீய்ச்சி அடித்து வெளியேற்றுகின்றது. இதுதான் கடலில் வெகுதூரம் வரை தெரிகின்றது.