- Back to Home »
- தெரிந்து கொள்வோம் »
- பிஎம்டபிள்யூ(BMW) கார்களின் டயர்கள்
Posted by : ஆனந்த் சதாசிவம்
Thursday, May 31, 2012
எத்தனை கார் மாடல்கள் வந்தாலும் பிஎம்டபிள்யூவின் கார்களுக்கு சந்தையில் தனி மவுசு உண்டு. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் பிஎம்டபிள்யூ கார்களை தட்டிக்கொள்ள வேறு கார்களில்லை
என்று கூறலாம்.
அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அளிப்பதில் பிஎம்டபிள்யூ எப்போதும் சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில், பல குறிப்பிட்ட வசதிகள் காரின் வகைக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆனால் அதில் ஒன்றே ஒன்று மட்டும் விதிவிலக்கு.
ஆம். டயர்கள்தான் அவை. பிஎம்டபிள்யூவின் அனைத்து சொகுசு கார்களிலும் “ரன் ப்ளாட்(Run Flat Tires)” டயர்கள் இல்லாமல் கார் தொழிற்சாலையை விட்டு வெளியில் வராது. கார்களின் பாதுகாப்பில் டயர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் டயர் விஷயத்தில் பிஎம்டபிள்யூ எப்போதும் விடாப்பிடி தன்மையுடன் இருந்து வருகிறது.
அமெரிக்காவாக இருந்தாலும், ஆபிரிக்காவாக இருந்தாலும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ரன் ப்ளாட் டயர்களை பொருத்திதான் தனது கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்து வருகிறது.
ஏனெனில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவொரு மாற்றுக்கருத்தையும் அந்த நிறுவனம்கொண்டிருக்கவில்லை.
அப்படி என்னதான் இருக்கு “ரன் ப்ளாட்” டயர்ல:
அதிநவின தொழில்நுட்பம் மற்றும் 100% பாதுகாப்பு வசதியை கொண்டதுதான் “ரன் ப்ளாட்” டயர்கள். பொதுவாக விவிஐபி கார்களில் இந்த டயர்கள்தான் பொருத்தப்படுகின்றன.
டயர்களில் திடீரென காற்றின் அழுத்தம் குறைந்தாலும், பஞ்சரானாலும் ரன் ப்ளாட் கார்களில் கண்ணை மூடிக்கொண்டு பயணத்தை தொடரலாம். இதில், ட்யூபை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள 'சைட்வால்(sidewall)' எனப்படும் கடினமான டயர்பகுதி காரின் எடையை தாங்கிக்கொள்ளும்.
இதேபோன்று, விஷேச ரிம்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் டயரில் காற்று குறைந்தால்கூட காரின் சமநிலை குறையாமல் சீராக செல்லும் என்பதால் விபத்து ஏற்படாது. காரின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்பி டயர்களில் காற்று குறைந்தால் அதுகுறித்து சாரதியை எச்சரிக்கும்.
இருப்பினும் உடனடியாக டயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. டயர்களில் காற்று இல்லாவிட்டால் கூட காரை அதிகப்பட்சம் 80 கி.மீ. வேகத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஓட்டி செல்ல முடியும்.
இந்த டயர் பொருத்தப்பட்டிருக்கும் கார்களில் மேலதிக டயர் தேவையில்லை என்பதால் 20 கிலோ வரை காரின் எடை குறையும் என்பதால் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.